
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு வகையான பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன .இந்தத் தேர்வுகளை எழுதும் தேர்வரர்களுக்கு முக்கியமான விதிமுறைகளையும்,அறிவுரைகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது .
இதன்படி தேர்வெழுதும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களையும் ,பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் தெளிவாக, விரிவாக இப்பதிப்பிவில் காண்போம் ..
1 .தேர்வர்கள் ,தேர்வு எழுதும் கூடத்திற்கு காலை 9 .15 மணிக்குள் செல்ல வேண்டும் .இதற்கு முன்பு தேர்வு தொடங்கும் வரையிலும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் . ஆனால் தற்போது இந்த நடைமுறையானது கைவிடப்பட்டு ,காலை 9 .15 மணிக்கு பிறகு தேர்வெழுத வரும் தேர்வர்கள் யாரும் தேர்வு எழுதும் கூடத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் ..
2 .தேர்வர்கள் விடைத்தாள்களில் விவரங்களை பூர்த்திசெய்யவும்,சரியான விடைகளை குறிக்கவும் கருப்பு நிற பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .இதர பென்சில் மற்றும் ஏனைய நிற மைப்பென்களை பயன்படுத்தக்கூடாது.
3.விடைத்தாள்களில் குறிப்பிட்ட இடங்களில் கையொப்பமும் ,இடதுகை பெருவிரல் ரேகையினையும் பதிக்க வேண்டும் .
4 .வினாத்தாள்களில் உள்ள ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தெரியவில்லையென்றால், விடைத்தாளில் (E) என்ற வார்த்தையினை கருமையாக்க வேண்டும் .
5 .விடைத்தாளில் எ,பி,சி,டி மற்றும் இ போன்ற ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அதன் என்ணணிக்கையை குறிப்பிட்ட இடத்தில் நிரப்பி அதனை கருமையாக்க வேண்டும் .இதில் ஏதாவது தவறு ஏற்படுமேயானால் தேர்வர்களின் தேர்வு மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது .இதற்கான கால அவகாசம் ஒவ்வொரு தேர்வருக்கும் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் .
மேற்குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளும் தேர்வர்களின் நன்மைக்காகவும் ,தவறுகளை தவிர்ப்பதற்காகவும் தேர்வாணையத்தால் கொண்டுவரப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது