
நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பட்டநிலையில் இருந்தது ,இது மீண்டும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது .
மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில்,நிவர் புயலின் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது .சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது .
நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு ,டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலானது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களையும் , அசாதாரண சூழலையும் ஏற்படுத்தியது .நிவர் புயல் காரணமாக போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன .இதன் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது .