
தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை திருவிழாக்கள், அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக்குழு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இதில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3-வது அலை வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ஊரடங்கு குறித்து தமிழக அரசு வெளியிட அறிக்கையில்..
- ஒரு சில மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து காணப்படுகிறது.
- திருவிழாக்கள், அரசியல், சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
- பொதுப்போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
- பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.
- கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.