
புதுவையில் உயர்கல்வி மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (செண்டாக்) கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.
புதுவை மாநில மாணவர்களுக்கு, நிகழாண்டு உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான சென்டாக் விண்ணப்ப விநியோகத்தை, ஆன்லைன் மூலமாக, புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், கல்வித்துறை அலுவலகத்தில் இருந்துதொடங்கி வைத்தார்.