
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும், செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை பெற, GVID (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.
- ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை திரும்ப பெற RVID (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்
ஆதார் அட்டை காணாமல் போனால், அந்த எண்ணை முற்றிலும் முடக்க, இரண்டு வழிமுறைகள் உள்ளன்.அவை.,
- முதற்கட்டமாக, GETOTP (SPACE) என டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்ணை சேர்த்து 1947 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.இரண்டாம் கட்டமாக,LOCK UID (SPACE) என டைப் செய்துவிட்டு, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, வரும் ஒடிபியை சேர்த்து, 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், ஆதார் எண் முடக்கப்படும்.