விரைவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜைகோவ்-டி தடுப்பூசி..

கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு,பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக கோவிஷியல்ட் ,கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் v தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு, செலுத்தப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசிகள் முதல் தவணையாக செவிலியர்களுக்கு ,முன்கள பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது, பின்னர் 45 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பு இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜைகோவ்-டி தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் அடிப்படையில், ஜைகோவ்-டி தடுப்பூசி திருப்திகரமான செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய வல்லுநர் குழுவின் தலைவர் என்.கே.அரோரா தடுப்பூசி குறித்து கூறுகையில்,

  • 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் வரும் செப்டம் மாதம் தொடங்கும். எனினும், இந்த தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்காக அனுமதி சில வாரங்களில் வழங்கப்பட உள்ளது,” என்று கூறினார்.
  • 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜைகோவ்-டி பாதுகாப்பானது என்று தரவு காட்டுகிறது, ஆண்டுதோறும் 100-120 மில்லியன் டோஸ் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ஜைடஸ் ஒப்புதல் பெற்றவுடன், ஜைகோவ்-டி இந்தியாவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாவது கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும்,அடுத்த வாரம் தடுப்பூசி ஆய்வு வல்லுநர் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜைகோவ்-டி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பங்கேற்போர், தங்கள் தடுப்பூசியின் திறனை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

முதுநிலை மருத்துவப் படிப்பிற்க்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ல் நடைபெறும் - மத்திய அரசு அறிவிப்பு..

Tue Jul 13 , 2021
முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான இளநிலை மாணவர்களுக்கு செப்டம்பர் 12ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. […]
NEET-EXAM-PG-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய