இந்தியாவில் ஜைகோவ்-டி(ZyCov-D) தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்..

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் என 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 6-வது தடுப்பூசியாக ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி வரவுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்து விடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்காக வரவுள்ள முதலாவது கொரோனா தடுப்பூசி இதுவே ஆகும்.50 இடங்களில் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது.இதனால் பக்க விளைவுகளும் குறைவு ஆகும்.

1000 குழந்தைகள் உள்பட 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.12-18 வயது பிரிவில் பரிசோதிக்கப்பட்ட முதல் தடுப்பூசியும் இதுவே ஆகும்.

Next Post

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

Wed Aug 18 , 2021
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன .தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன .அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் […]
School-reopen-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய