சிகா வைரஸ் முதன் முறையாக கேரளாவில் கண்டுபிடிப்பு ..

சிகா வைரஸ் முதன்முறையாக கேரளத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் கடந்த மாதம் 28-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு,அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகா வைரஸ் பாதிப்பானது முதன்முதலில் ஆப்பிரிக்காவிலும் பின்னர் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிற வெப்பமண்டல பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸானது ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கும் கர்ப்பிணிகளுக்கு,பிறக்கும் குழந்தைகளின் தலை இயல்பான குழந்தையின் தலை அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவது உருமாறிய கொரோனா வைரஸானது அச்சுறுத்தி வரும் நிலையில் ,தற்போது புதிய பாதிப்பாக ஜிகா வைரஸ் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

பி.எட் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி செய்முறை தேர்வு அறிவிப்பு..

Fri Jul 9 , 2021
ஆசிரியர் பணிக்கு தேர்வாக இருக்கும், பி.எட்., மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செய்முறை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பி.எட்., மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் வரும் 12 முதல் 17ம் தேதி வரை ஆன்லைன் வழியில், அந்தந்த கல்லுாரிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் சுற்றறிக்கை தற்போது […]
B-Ed-Practical-Exams
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய