மாணவர்களுக்கான இளம் எழுத்தாளர்கள் கவிமணி விருது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் ரூ.25,000 ரொக்கம், கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2021 – 2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் “கவிமணி விருது” வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

இளம் படைப்பாளிகளிடமிருந்து தமிழில் கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களது படைப்புகளைச் சமர்ப்பிக்க விரும்பும் இளம் எழுத்தாளர்கள் www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியிலிருந்து சுய விவரப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

மேலும் இந்த படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து 31.12.2021க்குள் தங்களது படைப்புகளுடன், பொது நூலக இயக்ககம்,737/1, அண்ணாசாலை, சென்னை – 600 002. என்ற முகவரிக்கு அனுப்பலாம்
அல்லது dpltnservices@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Sat Nov 20 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 884 பேர் குணம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 36,349 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் […]
district-wise-corona-updates-19-11-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய