ஜப்பான் -டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே அவர்கள் உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஜப்பானின் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார் அவருடைய வயது .விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவராக அந்த நாட்டின் நீண்ட நாள் அமைச்சராக இருந்தவர் யோஷிஹைட் சுகா . சுகா வரும் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள யோஷிஹைட் சுகா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”நாட்டின் பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொருளாதாரத்தை மீட்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடும்” என்று கூறினார்.
யோஷிஹைட் சுகா – வாழ்க்கை தொகுப்பு :
ஜப்பான் நாட்டின் ஒரு கிராமத்தில் பிறந்த யோஷிஹைட் சுகா குழந்தை பருவத்திலேயே ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.பின்னர் அவர் ஹோசி பல்கலைக் கழகத்தில் 1969ல் சேர்ந்தார். பல்வேறு செய்தித்தாள்களும், ஊடகங்களும் இவரை ஷின்சோவின் வலது கரம் என்றே முன்மொழிந்து வந்துள்ளன. இவர் ஷின்சோவுக்கு அடுத்து ஜப்பான் நாட்டின் பிரதமராக வலம் வருவார் என்று பேசப்பட்டது.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் 462 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெற்று பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கீழவை சபாநாயகர் தடமோரி ஓஷிமா அவர்கள் ,புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.