
சியோமி(Xioami) நிறுவனம் ஆனது 80W Mi வயர்லெஸ் (Wireless) சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது.இந்நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் 30w வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்(30w wireless fast charging) பேக்ஐ அறிமுகம் செய்ததோடு , சியோமி நிறுவனம் Mi 10 5G ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது .சியோமி நிறுவனம் இந்த ஆண்டில் இந்த ஒரு ஸ்மாட்போனே வகையை மட்டும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது .
சியோமி நிறுவனம் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை (30W ) அறிமுகம் செய்த நிலையில் ,மற்றுமொரு வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை(80W) அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது .80W பொறுத்தவரை, சார்ஜிங் மிகவும் வேகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.எனினும் இத்தொழில்நுட்பத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள் என்ற கேள்விக்கு இன்னும் சரியான விளக்கத்தை சியோமி நிறுவனம் தெளிவுப்படுத்தவில்லை .ஆனால் ஒரு டெமோ ஒன்றை வெளியிட்டுள்ளது .Mi10 ப்ரோவில் உள்ள 4000 எம்ஏஎச்(mah) பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் Mi 80w சிஸ்டமானது நிரப்புகிறது.
Mi 80w வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பானது 1 நிமிடத்தில் 10 % சதவீதம் பேட்டரியை நிரப்புகிறது மற்றும் 8 நிமிடங்களில் 50 % சார்ஜ் நிர்ப்பமுடிகிறது.இது புல் சார்ஜ் செய்ய 19 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது .இந்த தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனை பற்றி சியோமி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.