

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு 18 -9 -2021 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.