
உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்தார் தஞ்சையை சேர்ந்த எஸ் .ரியாஸ்தீன் எனும் மாணவர்.
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்தவர் எஸ்.ரியாஸ்தீன் .இவர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி .டெக்.மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் வடிவமைத்த செயற்கைக்கோளானது 2021 ஆம் ஆண்டில் நாசா விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்ட உள்ளது .இவர் வடிவமைத்த இந்த செயற்கைகோள் மூலம் தமிழகத்திற்கும் ,இந்தியாவிற்கும் மிகப் பெரிய பெருமையும் ,புகழும் சேர்த்துள்ளது .
உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த ரியாஸ்தீனுக்கு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வாழ்த்துக்களையும் ,பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் .மேலும் ரியாஸ்தீன் தமிழகத்திற்கும் ,இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது பெருமைக்குரியது என்றும் ,2021 இல் நாசா விண்வெளி நிறுவனத்தால் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்ட உள்ளது என்பது மேலும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு இடத்திலிருந்து வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது .
ரியாஸ்தீன் மேலும் பல்வேறு கண்டுபிடிப்புகளையும் ,சாதனைகளையும் பெற வேண்டும் என்று tamil.aptinfo.in சார்பாக வாழ்த்துகிறோம் .