
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது குரோஷியாவில் நடைப்பெற்று வருகிறது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சார்ந்த ரஹி சர்னோபத் கலந்து கொண்டார்.மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை சர்னோபத் இறுதிச்சுற்றில் 39 புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கு இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவே இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் ஆகும்.
முந்தைய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.