உலக துப்பாக்கி சுடுதல் போட்டி : 12 பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடம்..

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியானது தற்போது புது தில்லியில் நடைபெற்று வருகிறது .இப்பபோட்டியில் இந்திய அணி 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் தற்போது நடந்து வருகிறது.இப்பொடியானது சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஈரான், தாய்லாந்து, துருக்கி, கொரியா, சிங்கப்பூர் மற்றும் அங்கேரி உட்பட 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நேற்று (மார்ச் 21) நடந்த ஆடவர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்று முதல் பதக்கத்திற்கான தொடக்கத்தை ஏற்படுத்தினார். .இதனைத் தொடர்ந்து மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி ஒன்றில் யஷாஸ்வினி தேஸ்வால் (238.8 புள்ளிகள்) முதல் தங்க பதக்கம் பெற்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டினார்.மேலும்,இந்திய வீராங்கனை மனு பேக்கர் 236.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார்.

இந்தியாவின் சவுரவ் சவுத்ரி, ஷாஜர் ரிஸ்வி மற்றும் அபிசேக் வர்மா ஆகியோர் ஆடவர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் தங்க பதக்கம் பெற்று பெருமை சேர்த்ததோடு, பதக்கங்களின் எண்ணிக்கையையும் கூட்டினர்.

மேலும் இன்று (மார்ச் 22) நடைபெற்ற கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சவுரவ் சவுத்ரி – மனு பேக்கர் ஆகிய இருவரும் ஈரான் இணையை 16 -12 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் பெற்றுள்ளனர்.இதேப்போல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த திவ்யான்ஷ் சிங் மற்றும் பன்வார் – இளவேனில் ஆகியோர் ஹங்கேரி இணையை ௧௬ -௧௦ என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் 12 பதக்கங்களுடன், முதலிடத்தில் இருந்து வருகிறது.

Next Post

TNPSC பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு..

Mon Mar 22 , 2021
1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்,இதில் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காண அறிவிப்பை வெளியிட்டது.இதில்,தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டில் நான் […]
TNPSC-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய