
ஜெர்மனியில் நடைபெற்ற உலகக்கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது .
ஜெர்மனியில் கொலோன் நகரில் நடைபெற்றுவந்த உலகக்கோப்பை ஆனது ஞாயிற்றுகிழமை நிறைவடைந்த நிலையில் ,இறுதி நாளில் மகளிருக்கான 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌன் தங்கப்பதக்கம் வென்றார் .இதில் 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜித் கவ்ரும் தங்கம் வென்றுள்ளார் .சிம்ரன்ஜித் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் மாயா கிலியன்ஸை 4 -1 என்ற கணக்கில் வீழ்த்தினார் .
இப்போட்டியில் இந்தியா ,ஜேர்மனி ,பெல்ஜியம் ,குரோஷியா ,டென்மார்க் ,பிரான்ஸ் ,மால்டோவா ,நெதர்லாந்து ,போலந்து ,உக்ரைன் போன்ற நாடுகள் இந்த போட்டியில் பங்கு பெற்றன .
கொலோன் நகரில் நடைபெற்ற போட்டியில் பதக்கபட்டியலில் போட்டியை நடத்திய ஜெர்மனி 16 பதக்கங்களுடன்(4 தங்கம் ,7 வெள்ளி ,5 வெண்கலம்) முதலிடத்திலும் ,இந்தியா 9 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் (3 தங்கம் ,2 வெள்ளி ,4 வெண்கலம் ) ,பிரான்ஸ் 8 பதக்கங்களுடன்(3 தங்கம் ,1 வெள்ளி ,4 வெண்கலம்) மூன்றாவது இடத்தை பிடித்தது .