கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலக சுகாதார மையம் ..

கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து தயாரித்து வருகிறது.இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் பல நாடுகளுக்கு நட்பு ரீதியாக தடுப்பூசியை ஏற்றுமதி செய்து வருகிறது.

பல நாடுகள் உலக சுகாதார மையம் அங்கீகரித்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே, நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளன.இந்நிலையில் உலக சுகாதார மையம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருந்தது. இதனால் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது ஆஸ்திரேலியா, கயானா உள்ளிட்ட நாடுகள் கோவேக்சின் செலுத்தியவர்களை அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது உலக சுகாதார மையம், அவசர கால பயன்பட்டிற்காக உபயோகிக்க கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

தமிழகத்தில் வரும் 6-ந் தேதி 8-வது கொரோனா தடுப்பூசி முகாம்..

Thu Nov 4 , 2021
தமிழகத்தில் வரும் 6-ந் தேதி 8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 91 லட்சத்து 18 ஆயிரத்து 663 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 31 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கைகள் […]
covid-vaccination-camp-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய