கொரோனா தொற்று காரணமாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட மாநிலங்கள் எவை ?

கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் உலகமெங்கும் பரவத் தொடங்கியது.கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்,மேலும் உலகெங்கும் கொரோனாவிற்கு லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உலகமெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.உலக நாடுகள் அனைத்தும் கொரோனா இரண்டாவது அலை பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 1 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பலவேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று காரணமாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட மாநிலங்கள் ..

மகாராஷ்டிரா

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் உள்ளது.நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கானது மார்ச் 28 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் நேற்று (ஏப்ரல் 7) முதல் இரவுநேர ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.சதீஷ்கரில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சத்தீஸ்கரில் நேற்றைய கொரோனா பாதிப்பு 10,310 என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் பல மாவட்டங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி

தில்லியில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.தில்லியில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.தில்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் தில்லியை போன்றே பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது.தற்போது குஜராத்தில் முக்கியமான 4 மாவட்டங்களுக்கு மட்டும் இரவுநேர ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 3,575 ஆகும்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 60 மணிநேர ஊரடங்கை அம்மாநில அரசு விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை அனைத்து நகரங்களிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

உத்திர பிரதேசம்

உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா, லக்னெளவ், கான்பூர், வார்னாசி உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பானது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்தை நெருங்குவதால்,இன்று முதல் இரவுநேர ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இம்மாநிலத்தில் கொரோனவால் 6,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்

Next Post

நாட்டா (NATA) நுழைவுத் தேர்வு நாளை முதல் துவக்கம்

Fri Apr 9 , 2021
நாட்டா (NATA) நுழைவுத் தேர்வானது, பி.ஆர்க் (B.Arch) எனப்படும் இளநிலை கட்டிடவியல் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக (தேசிய கட்டிடவியல் திறனறித் தேர்வு) நடத்தப்படும் தேர்வாகும். நாட்டா (NATA) நுழைவுத் தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.2019 ஆம் ஆண்டு முதல் நாட்டா (NATA) நுழைவுத் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டு,ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நாட்டா (NATA) நுழைவுத் தேர்வு மூலம் பி.ஆர்க். (5 ஆண்டு) […]
NATA-entrance-test
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய