கொரோனா தொற்று உறுதியானால் நாம் மேற்கொள்ளவேண்டியவை..

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டு மக்களிடையே பெரும் பாதிப்பையும்,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வந்தது. கொரோனாவின் முதலாவது அலையை விட இரண்டாவது அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளது.பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.கொரோனா தொற்றின் ஆரம்ப நிலையை அடைந்தவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.

மத்திய அரசு கொரோனா உறுதியானவர்களுக்கு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது..

அறிகுறிகள் இல்லாத கொரோன நோயாளிகள் :

• முழுமையாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
• 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
• முகக் கவசம், கைகள் தூய்மை, பிறரிடமிருந்து விலகியிருத்தல் அவசியம்.

குறைந்த பாதிப்புடைய கொரோனா நோயாளிகள் :

• வீட்டில் தனிமைப்படுத்துதல் மிக்க நல்லது.
• 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை
• முகக் கவசம், கைகள் தூய்மை, தனி நபா் இடைவெளி
• காய்ச்சல், சளிக்கு தேவைப்பட்டால் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
• சளி, இருமல் அதிகரித்தால் ஆஸ்துமா இன்ஹேலா்களைப் பயன்படுத்தலாம்
• 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நாடித் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், உடல் வெப்ப பரிசோதனை ஆகியவற்றினை மேற்கொள்ள வேண்டும்.

மிதமான ,தீவிர பாதிப்புக்குள்ளானவர்கள்

• மிதமான பாதிப்புடையவா்கள் மருத்துவமனைகளை நாட வேண்டும்
• தீவிர பாதிப்புக்கு ஐசியூ பிரிவில் சிகிச்சை அவசியம்
•6 நிமிட நடைப் பயிற்சி பரிசோதனை
• கை விரலில் பல்ஸ்-ஆக்ஸி மீட்டரை பொருத்திக் கொண்டு தொடா்ந்து 6 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது ரத்த ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தாலோ, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
• ஒவ்வொரு 6 – 8 மணி நேரத்துக்கு ஒரு முறை இப்பரிசோதனையை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தேவையான ஆய்வகப் பரிசோதனைகள்

• முழு ரத்த அணு பரிசோதனை (சிபிசி),
• ரத்த சா்க்கரை அளவு,
• சிறுநீா் பரிசோதனைகள்,
• சி-ரியாக்டிவ் புரோட்டின் (சிஆா்பி),
• சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் திறன் பரிசோதனை (எல்எஃப்டி, கேஎஃப்டி),
• ஃபெரிட்டின் எனப்படும் ரத்த உைல் தொடா்பான பரிசோதனை,
• டி-டைமா், எல்டிஹெச், சிபிகே உள்ளிட்ட ரத்தத்தில் கிருமிகள் உள்ளதைக் கண்டறியும் பரிசோதனைகள்.
• சிஆா்பி, டி-டைமா் பரிசோதனைகள் 48 முதல் 72 மணி நேரத்துக்கு முறை மருத்துவரின் ஆலோசனைப் படி திரும்பவும் மேற்கொள்ள வேண்டும்.
• சிபிசி, எல்‘ஃ‘எப்டி, கேஎ‘ஃ‘ப்டி பரிசோதனைகள் 24 முதல் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் மேற்கொள்வது அவசியம்.
• நெஞ்சக ஊடு கதிா் (எக்ஸ் – ரே) பரிசோதனைகள் 48 மணி நேரத்துக்குப் பிறகு தேவைப்பட்டால் மட்டுமே மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.
• மிதமான மற்றும் தீவிர பாதிப்புடையவா்கள் மட்டுமே நெஞ்சக சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
• மருத்துவரின் ஆலோசனைப்படியே மட்டுமே மேற்கொண்ட பரிசோதனைகளை செய்தல் வேண்டும்.

தன்னிச்சையாக எடுக்கக் கூடாத மருந்துகள்

• ரெம்டெசிவிா்
• ஸ்டீராய்டு மருந்துகள்
• ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஏன்ட்டிகாக்ளன்ட் மருந்துகள்
• டோஸிலிசுமேப்

Next Post

'எஸ்எச்ஜி-95' மலிவு விலை முகக்கவசம் : 'என்-95 ’க்கு மாற்றாக 'எஸ்எச்ஜி-95'

Fri Jun 11 , 2021
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முகக்கவசம் நம் அனைவரின் உயிர் கவசமானது.இந்த முகக்கவசங்கள் தீநுண்மி, நுண்ணிய கிருமிகளிடமிருந்து 99 சதவீதம் வரை பாதுகாக்கும் வீரியமிக்க பல மலிவு விலை முகக்கவசங்களை இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும், மறு உபயோகத்துக்குப் பயன்படாத ‘என்-95 ’ முகக்கவசங்களுக்கு மாற்றாக ‘எஸ்எச்ஜி-95’ முகக்கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் […]
SHG-95-mask
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய