லிக்விட் பண்டுகள்(Liquid fund) என்பது என்ன ?இதில் முதலீடு செய்வது எப்படி?

லிக்விட் பண்டுகள் (Liquid fund )என்பது மியூச்சுவல் ஃபண்டுகளாகும் (mutual fund ).இது குறுகிய கால செகியூரிட்டிகளில் (security) முதலீடு செய்வதாகும் .இது பொதுவாக அரசாங்க செகியூரிட்டிகளில் முதலீடு செய்வதாகும் .

லாக் பீரியட் (Lock period ) என்பது லிக்விட் பண்டுகளை பொறுத்தவரை கிடையாது .அதனால் உங்களது பணத்தினை 24 மணிநேரத்திற்குள் திரும்ப பெற இயலும் .இந்த லிக்விட் பண்டுகளுக்கு உள்ளீடு மற்றும் வெளியீடு கட்டணம் கிடையாது .

லிக்விட் பண்டு ஆனது குறுகிய காலத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பவர்களுக்கு இது பொருந்தும் .இதில் முதலீடு செய்ய விரும்புவார்கள் முதலில் 5000 செலுத்த வேண்டி இருக்கும் .பின்னர் மாதம் 1000 முதலீடு செய்து கொள்ளலாம் .

லிக்விட் பண்டுகளில் முதலீடு செய்வதால் எந்தவித நட்டமும் அல்லது பங்கமும் விளையாது .இது வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதிகளை போல லாபம் தரக்கூடியது.இதில் நாம் கணிசமான தொகையை பெறலாம் .

லிக்விட் பண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அதனை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதனை பற்றி ஆலோசனைகளையும் மற்றும் முழு விவரங்களையும் பெற்றிருத்தல் வேண்டும் .லிக்விட் பண்டுகளில் முதலீடு செய்து ஓராண்டுக்குள் எடுத்தால் ,நீங்கள் குறுகிய கால மூலதன வரி கட்டவேண்டியிருக்கும் அல்லது மூன்றாண்டுக்குள் எடுத்தால் நீண்ட கால மூலதன வரி கட்டவேண்டியிருக்கும் .இந்த வரியானது உங்கள் வருமான வரம்புக்கு ஏற்றவாறு இருக்கும் .

பொதுவாக ,நீங்கள் எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன் ,அதில் தெளிவான எண்ணமும் மற்றும் அதனை பற்றி பலரிடம் ஆலோசனை பெற்றிருந்தாலும் இறுதியில் முடிவானது நீங்களாகவே எடுத்தல் வேண்டும் .சிந்தித்து செயலாற்றுங்கள் ….

Next Post

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையான இன்றைக்கு சனிபகவான் அனுகிரகம் பெரும் ராசிக்காரர்கள் ...

Sat Sep 26 , 2020
மானிடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நிகழ்கால மற்றும் எதிர்கால நன்மைகள் பற்றி அறிய ஆவல் கொள்வது உண்டு .ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும் ,நாம் அனைவருக்கும் அன்றைய நாள் நல்ல நாளாகவும் ,அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவும் அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும் .இதனை அறிந்து கொள்வதற்கு நமக்கு உதவியாக இருப்பது ராசி பலன்களாகும் .நவகிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களுக்கு ஏற்ப நமது வாய்ப்புகளும் வெற்றிகளும் அமைந்திருக்கும் . மேஷம் மேஷம் […]
raasi-palangal-sep-26
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய