
நாடு முழுவதும் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது ப்ளாக் ஃப்ங்கஸ் என்ற புதிய நோய் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.பிளாக் ஃபங்கஸ் தொற்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் மும்பையில் மட்டுமே 111 கரோனா நோயாளிகள் ம்யூகோர்மைகோசிஸ் நோய்க்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாக் ஃபங்கஸ் என்பது ம்யூகோர்மைகோசிஸ் எனும் பூஞ்சை தொற்றாகும்.இந்த தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை மேற்கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ம்யூகோர்மைகோசிஸ் :
பிளாக் ஃபங்கஸ் எனப்படும் ம்யூகோர்மைகோசிஸ் மண்,காற்று மற்றும் ஆரோக்கியமாக இருப்பவர்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட காணப்படுகிறது.இவை எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு வகை பூஞ்சை தொற்றாகும்.மேலும் இவை மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சை தொற்றாகும்.
ம்யூகோர்மைகோசிஸ் பெரும்பாலும் உடல்நலக் குறைவால் மருந்துகளை உட்கொண்டு அதனால் சுற்றுச்சூழல் கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவர்களையே தாக்குகிறது. இது அரிதான தொடராக இருந்தாலும் சில சமயங்களில் ஆபத்தை உண்டாக்கக்கூடியது
ம்யூகோர்மைகோசிஸ் நோயின் அறிகுறிகள்:
*கண்களைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தடிப்புகள்
*கண்களைச் சுற்றி வலி
*காய்ச்சல்
*தலைவலி
*இருமல்
*மூச்சுத் திணறல்,
*ரத்தக்கசிவுடன் வாந்தி,
*மனப்பதற்றம் அல்லது குழப்பம்