இன்ஃப்ளுயன்சா நோய் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ?

தற்போது மழைக்காலம் நெருங்கி வருவதால் அனைத்து குழந்தைகளுக்கும் இன்ஃப்ளுயன்ஷா வேக்சினேஷன் போட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஃப்ளு அல்லது இன்ஃப்ளுயன்ஷா என்ற நோயிலிருந்து நம் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் நமது குழந்தைகளுக்கு வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. இருப்பினும் காய்ச்சல், மூக்கு அடைப்பு மாற்று மற்ற சளி சம்மந்தப்பட்ட அறிகுறிகள் இருந்தால், குழந்தைகள் இன்ஃப்ளுயன்ஷா என்னும் அபாய கட்டத்திற்குள் வருவார்கள், இதனை ஃப்ளு என்றும் கூறலாம்.

ஃப்ளு காய்ச்சல் மிக விரைவாக பரவக்கூடிய வைரல் கிருமி இது காற்று வழியில் குழந்தைகளின் நுரையீரலை தாக்கலாம் மற்றும் இது ஒரு பொதுவான ஒவ்வொரு வருடமும் வரும் மூச்சுக்குழல் பிரச்சனை3. ஜான் ஹாப்கின்ஸ் நடத்திய ஒரு ஆராய்ச்சியில் ஒரு வாரத்தில் குழந்தைகள் சரி ஆகினாலும், மற்றவர்களுக்கு தீவிர தொற்று பரவி மருத்துவ தேவை மற்றும் நுரையீரல் தொற்று (நியூமோனியா) அல்லது இறப்பு வரை நேரிடலாம்.

இன்ஃப்ளுயன்சா நோய் யாருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்?

இன்ஃப்ளுயன்சா நோய் தனிநபர்களை அதிக அளவில் தாக்க வாய்ப்பு உள்ளது.மேலும்,
*6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள குழந்தைகள்
*கர்ப்பிணி பெண்கள்
*65 வயது மற்றும் மேலுள்ள வயதானவர்கள்
*நல சேவகர்கள் மற்றும் நீரழிவு நோய்
*ஆஸ்துமா, புற்றுநோய் நோய் எதிர்ப்பு சக்தி குறையுடையவர்கள்..

பாதுகாப்பு வழிமுறைகள் :

  1. குழந்தைகளுக்கு இரும்பும் போதும் தும்மும் போதும் வாயை மூட கற்றுக் கொடுப்பது.
  2. கைகளை அடிக்கடி மற்றும் நன்கு கழுவுவது. தண்ணீர் இல்லாத தருணங்களில், சானிடைசேர் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.
  3. தொற்று ஏற்பட்டவர்களுடன் சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் நேரடி தொடர்பை தவிர்த்தல்.
  4. குறிப்பாக பொது இடங்களில் முக கவசம் அணிதல்.
  5. ஆண்டிற்கு ஒருமுறை இன்ஃப்ளுயன்ஷா வேக்சினேஷன்.

Next Post

10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் : உச்சநீதிமன்றம்

Tue Jun 22 , 2021
சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு உச்சநீதிமன்றம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவா்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சிஐசிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான அனைத்து மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை […]
supreme-court-allowed-cbse-mark-system
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய