
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது.12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்வதற்கு வசதியாக, அவர்களின் செல்லிடப்பேசி எண்களுக்கே மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் மதிப்பெண்ணில் திருப்தியில்லாத மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவது ஒன்றே வழி என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளில் (மதிப்பெண்களில்) திருப்தி இல்லாதவர்களும், தனித் தேர்வர்களும், தேர்வெழுதாதவர்களுக்கும் செப்டம்ர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவா்களுக்கு அவா்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 எழுத்துத் தோ்வுகளின் அடிப்படையில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் ,தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், 600க்கு 600 மதிப்பெண் யாரும் எடுக்கவில்லை 551 மதிப்பெண்கள் முதல் 600 வரை 30,600 பேர் எடுத்துள்ளனர்.