
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 17 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. மேலும் இந்த வைரஸானது தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க வைரஸ் ஓமிக்ரான் , ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் என தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.