கொரோனாவை கண்டறியும் சிறந்த பரிசோதனைகள் எது ?

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கு தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அதில் பல குளறுபடிகள், தவறான முடிவுகள் பெறப்பட்டதால் அதை நிறுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு சி.டி.ஸ்கேன் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆர்.டி.பி.சி.ஆர்(RT PCR) பரிசோதனை :

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முறை பயன்படுத்தப்படுகிறது.தற்போது ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் சளி மாதிரிகளைச் சேகரித்து பரிசோதிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனை செய்வதற்கு தனியார் ஆய்வகங்களில் ரூ.4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முடிவுகளை அறியவும் ஓரிரு நாள்கள் ஆகின்றன.

ஆர்.டி.பி.சி.ஆர் மட்டுமே கோவிட்-19 நோய்க்கு முறையான பரிசோதனை முறை என்று கூறப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு சி.டி ஸ்கேன் செய்வது அவசியம் என்று கூறுகின்றனர் ஒரு சில மருத்துவ நிபுணர்கள்.

சி.டி.ஸ்கேன் (CT SCAN):

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து, கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு சி.டி ஸ்கேன் செய்வது அவசியம்.கொரோனா வைரஸ் நோயின் தீவிரத்தை அறிவதற்கு, நுரையீரல் பாதிப்பின் அளவை அறிந்துகொள்ள சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும்.

சி.டி.ஸ்கேனின் மூலம் நோயின் தீவிரத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அதற்கான குறியீடுகள் ஸ்கேன் முடிவில் இடம்பெற்றிருக்கும். பாதிப்பின் அளவுக்கான ஸ்கோர் 20 அல்லது அதற்குக் கீழ் இருந்தால் மிதமான பாதிப்பு, 20-க்கு மேல் இருந்தால் தீவிரமான பாதிப்பு, 30-க்கும் மேல் இருந்தால் மிகவும் தீவிரமான பாதிப்பு என்று புரிந்துகொள்ளலாம். பாதிப்பின் தீவிரத்துக்கு ஏற்ப சிகிச்சையும் அளிக்க முடியும்.

Next Post

கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் பரவும் ஒரு வகை பூஞ்சை தொற்று..

Fri May 7 , 2021
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வருகின்றது.தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு வகையான பூஞ்சை பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகோர்மைசிசீஸ் எனப்படும் ஒருவகையான பூஞ்சை தொற்று கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் பல கொரோனா நோயாளிகள் இந்த தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கொரோனாவின் முதல் அலையின் போதும் இந்த பூஞ்சை தொற்று பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.ஆனால்,தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த பூஞ்சை தொற்றும் […]
Mucormycosis-fungus-infection-in-covid-19
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய