தமிழகத்தில் வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் என்னென்ன ?

  • பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும்
    காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

Next Post

நாடு முழுவதும் 52 பேருக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு..

Fri Jun 25 , 2021
நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஆனது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் ஆனது அதிக தீவிரத் தன்மை கொண்டதாகவும்,எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. நாடு முழுவதும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இதுவரை 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா […]
Delta-Plus-Virus-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய