
அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட ஏஒய்.4.2 ரக புதிய வகை கொரோனா தற்போது பெங்களூருவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு சில கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது.
புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் இரண்டு பேரும் கொரோனா அறிகுறிகள் ஏதுமின்றி இருந்தாகத் தெரியவந்துள்ளது.மேலும் இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே, புதிய வகை கரோனா அச்சம் கொள்ளும் வகையில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
புதிய வகை ஏஒய்.4.2 ரக கரோனா வைரஸ் பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வருகிறது.இது கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதற்கான அறிகுறியாகும்.
கொரோனா மூன்றாவது அலையை முற்றிலும் தடுக்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசியை முறையாக இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுதல் அவசியமாகும்.இது நம் உயிரை காக்கும் கவசமாகும்.மேலும் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் மூன்றாவது அலையை முற்றிலுமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒழித்திடலாம்.