
வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ,புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதற்கும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹி அறிவித்துள்ளார் .
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி வருகிற நவம்பர் 16 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது .இதனையொட்டி ,நவம்பர் மாதம் 21 ,22 மற்றும் டிசம்பர் 12 ,13 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹி கூறியுள்ளார் .

சிறப்பு முகாம் மூலம் வாக்காளர் அடையாளை அட்டை திருத்தப்பட்டு மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு ,இறுதி வாக்காளர் பட்டியல் ஆனது வருகிற ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது .
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹி அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைகளை மேற்கொண்டார் .வாக்காளர் பட்டியலிலிருந்து கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என சத்யப்ரதா சாஹி அறிக்கையில் வெளியிட்டுள்ளார் .