‘விவாத் சே விஷ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வரித்தாக்கல் செய்ய மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..

கொரோனா தொற்றின் காரணமாக மத்திய அரசின் ஒரு சில திட்டங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வருமானவரி தொடர்பான வழக்குகள் மற்றும் சிக்கல்களை தீர்க்க மார்ச் 31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விவாத் சே விஷ்வாஸ் (Vivad se Vishwas) திட்டமானது வருமான வரி தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.

‘விவாத் சே விஷ்வாஸ்’ திட்டத்தின் நோக்கம் :

நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 2020-2021 ஆம் நிதியாண்டிற்க்கான பட்ஜெட்டில் தேங்கியிருக்கும் வருமான வரி வழக்குகளை முடிக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.இத்திட்டம் தனிநபர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விவாத் சே விஷ்வாஸ் திட்டத்தின் மூலம் பயனடைபவர்கள் யார் ?

*இந்த திட்டத்தின் மூலம் வருமான வரி தொடர்பான முறையீடு (Appeals) மற்றும் மனு (Petitions) போன்ற சட்ட நடவடிக்கைகள் நிலுவையிலிருப்பவர்கள்,வருமான வரி ஆணையர் மேல்முறையீடு தொடர்பான திருத்த மனுக்கள் (Revision Petitions) அளித்தவர்கள்,
*வழக்குத் தீர்ப்பாயக் குழுவிடம் (Dispute Resolution Panel) வழக்குகள் நிலுவையிலுள்ளவர்கள்,
*வருமான வரித் தேடலின் (Income Tax Search) மூலம் எழுப்பப்பட்ட தொகை ரூ.5 கோடிக்குக் கீழ் இருக்கும் நபர்கள்
*மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் இன்னமும் முடியாத நபர்கள்.

மேற்குறிப்பிட்ட அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் நிலுவையிலுள்ள வழக்குகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து சர்ச்சைக்குரிய அல்லது விவாதத்துக்குரிய வரி மற்றும் வருமானம் தொடர்பான வழக்கை முடித்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம்.

விவாத் சே விஷ்வாஸ் திட்டத்தில் பங்குபெற முடியாதவர்கள் யார் ?

விவாத் சே விஷ்வாஸ் திட்டத்தில் யார்யார் பங்கு பெறலாம் மற்றும் யார் இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் என்று மத்திய அரசு தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி கீழ்கண்ட நபர்கள் இத்திட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆவர்.

*சொத்து வரி வழக்குகள் (Wealth Tax),
*வட்டித் தள்ளுபடி மனு (Interest Waiver Application),
*பண்டப் பரிவர்த்தனை வரி (Commodity Transaction Tax),
*அட்வான்ஸ் ரூலிங்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமானம் தொடர்பான வழக்குகள்.
*அட்வான்ஸ் ரூலிங்கில் (Advance Ruling) நிலுவையிலுள்ள வழக்குகள்.
*பிரிவு 148-ல் உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள ரிட் மனு தாக்கல் செய்தவர்கள்.

Next Post

பான்கார்டு - ஆதார் இணைப்பு : மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு ..

Tue Mar 23 , 2021
இந்தியாவில் தற்போது ஆதார் கார்டு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.மேலும் மத்திய அரசு கடன் மோசடிகளை தவிர்ப்பதற்கும்,வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டுள்ளது. இதன்படி, தொடக்க நிலையில் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு மார்ச் 31,2020 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.அதே சமயத்தில் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் காரணமாக […]
aadhar-pancard-link
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய