விஐடி(VIT) பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு..

விஐடி(VIT) பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் இம்மாதம் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

மத்திய அரசின் அந்தஸ்து பெற்ற, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான,வி.ஐ.டி., கல்வி நிறுவனத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலுார் ‘இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற வி.ஐ.டி., நிறுவனம், வேலுார், சென்னை, ஆந்திரா மற்றும் போபால் ஆகிய இடங்களில், நிகர் நிலை பல்கலையாக செயல்பட்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த கல்வி நிறுவனத்தின் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பாண்டிற்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன்’ வழியில், வரும், 28, 29, 31ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு தேர்வு விண்ணப்பம், கல்வி நிறுவனத்தில் இடம் பெற்றுள்ள படிப்பு விவரங்கள் , மாணவர் சேர்க்கை நடவடிக்கை போன்றவை முழு விவரத்தைப் பெற www.vit.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

Next Post

ஆர்டிபிசிஆர்(RT PCR) பரிசோதனை யாருக்கு தேவையில்லை ? ஐசிஎம்ஆர்ரின்(ICMR) புதிய வழிகாட்டுதல்கள்

Thu May 6 , 2021
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடங்களின்அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒரு சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது மொத்தம் 2506 கொரோனா பரிசோதனை மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் பரிசோதனை கூடங்களுக்கு நிறைய […]
RT-PCR-Test-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய