சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி : தமிழக பள்ளி மாணவியின் அறிய கண்டுபிடிப்பு !!

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் வினிஷா ஆவர் .இவர் ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை உமாசங்கர், தாயார் சங்கீதா ஆவர் .இளம் வயதிலிருந்தே அவருக்கு அறிவியல் மீதான ஆர்வம் மற்றும் ஈடுபாடு அதிகமாக இருந்து வந்தது.வினிஷாவிற்கு பள்ளி பருவத்திலிருந்தே அறிவியல் சம்பந்தமான பாடத்திட்டத்தின் மூலம் அறிவியல் ஆர்வமானது அதிகரிக்க தொடங்கியது .

வினிஷா கண்டுபிடிப்பின் காரணம் மற்றும் நோக்கம் :

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை பற்றி படிப்பதில் அதிக ஆர்வம் காட்டிய வினிஷா ஒரு நாள் ,தான் பள்ளியிலிருந்து வரும் வழியில் சாலையோரங்களில் சலவை தொழிலாளர்களைக் கண்டார் . அவர்கள் இஸ்திரி செய்வதற்கான கரியைச் சாலையில் காய வைத்துக் கொண்டிருந்தனர்.அதை உற்றுநோக்கிய வினிஷா காய வைத்த அந்த கரித் துண்டுகளை இஸ்திரி செய்வதற்குப் பயன்படுத்திய பிறகு, அதனை குப்பையில் போடுவதைக் கண்டாள்.

குப்பையில் போடும் கரித்துண்டுகளால் பல்வேறு பிரச்சனைகளை நம் எதிர்கால சமுதாயம் எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணமானது விநிஷாவிற்கு உதித்தது .கரித்துண்டுகளால் சுற்றுச்சூழல் மற்றும் நிலம் ,நீர்,காற்று போன்ற இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் எனவும் ,கரித்துண்டுகள் தேவைப்படும் என்பதால் அதிக மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலையும் உருவாகும் .எனவே இதனை முற்றிலுமாக தடுப்பதற்கு சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி வண்டி (Solar Ironing Cart) ஒன்றை உருவாக்க நினைத்து ,அதற்கு அவரது தனிப்பட்ட முயற்சியும் ,கடின உழைப்பும் அவரது எண்ணத்தை நிறைவேற்றியது .

சூரிய ஒளி இஸ்திரி வண்டி வேலை செய்யும் விதம் மற்றும் அதன் பயன்கள் :

சூரிய தகடுகள் உதவியால் நேரடியாக சூரிய ஒளியைப் பெற்று அதனை வண்டியில் பொறுத்தப்பத்துள்ள பாட்டரி மூலம் சேமித்து வைக்கப்படுகிறது .பேட்டரியிலிருந்து நேரடியாக வெப்பம் இஸ்திரிப் பெட்டிக்குச் செல்கிறது. இந்த முறையானது நேரடி சக்தியில்(Direct Current) இயங்குவதால் மின் சக்தி குறைவாகப் பயன்படுத்தப்பட்டு, நீண்ட நேரம் மின் சக்தி நீடிக்க உதவும் என மாணவி வினிஷா விளக்கம் அளித்துள்ளார் .இதன் மூலம் குறைந்தபட்சம் 8 வருடங்கள் சலவை தொழில் செய்பவர்கள்,தங்களது வருமானத்தை சேமித்துவைக்கலாம் அல்லது மிச்சப்படுத்தலாம் .

சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி திட்டத்திற்காக 2019 ஆண்டு “டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இக்னைட் விருது மாணவி வினாஷவிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை தொடர்ந்து சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர் பிரிவில் “டாக்டர் பிரதீப் பி தேவனூர் விருது” வினிஷாவுக்கு கிடைத்துள்ளன.

மாணவியின் அறிய கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் ‘மாணவர் பருவநிலை விருது’ கொடுக்கப்பட்டுள்ளது.இந்த சர்வதேச விருதின் நோக்கமானது ,சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 23 -11 -2020

Mon Nov 23 , 2020
மேஷம் இன்று குடும்பத்த்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .பண வரவு அதிகரிக்கும் .உறவினர்களின் வருகையால் மகிச்சியானது உண்டாகும்.எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் . சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற் பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .கணவனை மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .பிள்ளைகளால் சந்தோசம் உண்டாகும் .குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை […]
indraya-raasi-palangal-23-11-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய