
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முகிழ் படமானது நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது .விஜய் சேதுபதி தற்போது எண்ணற்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .லாபம் ,காத்துவாக்குல ரெண்டு காதல் ,துக்ளக் தர்பார் ,யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் .
முகிழ் படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ரெஜினா கெசான்றா இணைந்துள்ளார் . இப்படத்தை
அறிமுக இயக்குனரான கார்த்திக் இயக்கியுள்ளார் .இப்படத்தை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார் .முகிழ் படமானது ஒரு மணிநேர படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விஜய் சேதுபதியின் முகிழ் படமானது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் ,அவரது மாமனிதன் ,இடம் பொருள் ஏவல் ,கடைசி விவசாயி போன்ற படங்களின் வெளியீடானது தாமதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது .தற்போது ஹிந்தியிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார் விஜய் சேதுபதி .ஷாஹித் கபூருடன் இணைந்து ஹிந்தியில் இணைய தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் .இது தவிர ,இயக்குனர் மணி ரத்தினம் தயாரிப்பில் நவரசா என்ற இணைய தொடரிலும் நடித்துள்ளார் .இத்தொடர் நெட்பிலிக்ஸில் வெளியாக உள்ளது .