
நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக பக்தர்களால் போற்றப்படுவது வைத்தீஸ்வரன் கோவில் ஆகும் .வைத்தீஸ்வரன் கோவில் தலமானது காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 16-வது தலமாக விளங்குகிறது .நவக்கிரக ஸ்தலங்களில் வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் ஸ்தலமாக விளங்குகிறது.
ஆலய வழிபாடு :
வைத்தீஸ்வரன் கோவில் ஆலயமானது தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்நேரங்களில் ஆலய வழிபாடு மிக ச் சிறப்பாக நடைபெறும்.
கோவிலின் சிறப்பு :
வைத்தீஸ்வரன் ஆலயமானது புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், காவிரியின் வடகரையிலுள்ள சிவஸ்தலங்களில் மிகப்பெரிய சிறப்புடனும் ,பிரார்த்தனை கூடமாகவும் விளங்குகிறது .புள்ளிருக்குவேளூர் என்ற சிறப்பு பெயரானது சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலமானதால்
இப்பெயர் பெற்றது .
சிவபெருமான் வைத்தியநாதர் என்ற பெயருடன் பிறவிப் பிணியைப் போக்கி உடன் மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார்.இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்பது ஐதீகமாகும் .
ஆலயத்திற்கு செல்லும் வழி :
சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் பேருந்து வசதிகள் இயக்கப்படுகின்றன.
ஆலய முகவரி:
அருள்மிகு வைத்தீஸ்வரன்கோவில் திருக்கோவில்,
வைத்தியநாதர் திருக்கோவில் ,
வைத்தீஸ்வரன்கோவில் அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 117.