
ஏகாதசி விரதமானது உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும் ,உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது ஆகும் .ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உள்ளது .ஏகாதசி விரதத்தினால் உள்ளத் தூய்மை ,உடலின் அகத்தூய்மை போன்ற பல நன்மைகள் உண்டாகும் .அஸ்வமேதயாகம் செய்த பலனை இந்த ஏகாதசி விரதத்தினால் பெற முடியும் .முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் ஏகாதசி விரதமாகும் .ஒருமுறை சிவபெருமான் ஏகாதசி விரதத்தின் மகிமையை தேவி பார்வதியிடம் எடுத்து கூறினார் .
ஏகாதசி விரதமுறை :
பொதுவாக அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் இருந்தாலும்,வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது தனி சிறப்பாகும் .ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முந்தய நாள் தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு ,மறுநாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் இருக்க வேண்டும் .அந்நாள் இரவில் பெருமாளின் பெருமையை பேசுவதும் ,விஷ்ணுவின் நாமத்தை உச்சரிப்பதும் ,ரங்கநாதர் துதியை போற்றுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு அந்நாளின் பொழுதை போக்க வேண்டும் . மறுநாள் துவாதசி நாளில் காலையில் 21 வகையான காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும் .இதில் அகத்திக்கீரை ,நெல்லிக்காய்,சுண்டைக்காய் போன்றவற்றை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும் .துவாதசி நாளில் சாப்பிட பிறகு அன்று பகலிலும் உறங்கக்க கூடாது .
ஏகாதசி விரதத்தின் பொது எக்காரணம் கொண்டும் துளசியை பரிக்கக் கூடாது .பூஜைக்கு தேவையான துளசி செடியை முன்னரே பறித்து வைத்து கொள்ள வேண்டும் .ஏகாதசி விரதமானது பத்தாவது திதியாகிய தசமி ,பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி ,பன்னிரெண்டாம் திதியாகிய துவாதசி ஆகிய மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதம் ஆகும் .ஏகாதசி விரதத்தினால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று ,ஆரோக்கியமான உடல் நலத்தினையும் பெறுவார்கள் .