தனிப்பெருங் கருணை அருட்பெரும்ஜோதி : வடலூர் வள்ளலார் தெய்வ ஜோதி தரிசனம் …

தைப்பூச திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ,வடலூரில் அமைந்துள்ள திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஜோதி தரிசன வழிபாடு வெகு விமர்சையாக நேற்று (வியாழக்கிழமை )நடைபெற்றது .

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும் .இதில் தை மாதத்தில் வரும் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .இதன்படி ,வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 150 -வது ஆண்டு தைப்பூச ஜோதி பெருவிழாவானது கொடியேற்றத்துடன் (புதன்கிழமை ) நடைபெற்றது .இதனைத்தொடர்ந்து வடலூரில் உள்ள சத்திய தரும சாலையில் வள்ளலாரின் அகவலை பாராயணம் நடைபெற்று சன்மார்க்க கொடியை வள்ளலார் அன்பர்கள் ஏற்றினர் .

திருவருட்பிரகாச வள்ளலாரின் ஜோதி தரிசனம் :

விழாவின் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை அன்று ஜோதி தரிசனம் நடைபெற்றது .அதிகாலை 6 மணிக்கு 7 திரைகள் விளக்கப்பட்டு தரிசனம் காண்பிக்கப்பட்டது .இதனை தொடர்ந்து காலை 10 மணி ,நண்பகல் 1 மணி ,இரவு 7 மணி ,10 மணி ஆகிய நேரங்களிலும் ,வெள்ளிக்கிழமை (இன்று ) 5 .30 ஆகிய 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது .ஜோதி தரிசனத்தை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தெய்வ தரிசனத்தை பெற்றனர் .ஜோதி தரிசனமானது பக்தர்களுக்காக எல்இடி(LED) மூலம் காண்பிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக ஜனவரி 30 ஆம் தேதி சித்திவளாக திருவறை தரிசன நிகழ்வு
நடைபெறும் .

Next Post

சிபிஎஸ்இ 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை : பிப்ரவரி 2 ல் வெளியீடு - கல்வித்துறை அறிவிப்பு ..

Fri Jan 29 , 2021
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2 ல் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார் . சமீபத்தில் நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடனும் ,செயலாளர்களுடனும் அமைச்சர் காணொளி மூலம் கலந்தோசித்தது குறிப்பிடத்தக்கது . கொரோன பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன .இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்க்கான சிபிஎஸ்இ 10 […]

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய