
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதில் அதிகமாக 80 சதவீதம் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.
இந்தியாவில் தற்போது 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து சீரம் நிறுவனம் வெளியிட அறிக்கையில் ,சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி பிரத்யேகமாக ‘கோவாவேக்ஸ்’ என்ற பெயரில் தயாரிக்க உள்ளோம். இந்த மருந்து விரைவில் சோதனைகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த தடுப்பூசி மருந்துகள் குழந்தைகளுக்கு போடப்படும் என்று தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட்டில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தற்போது மாதத்திற்கு 22 கோடி டோஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக இந்த உற்பத்தியை 24 கோடியாக உயர்த்த உள்ளத்தக்க சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,பூஸ்டர் தடுப்பூசி போடுவதாக இருந்தால் அதை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக முதியவர்களுக்கு பூஸ்டர் ஊசி போட வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை நாங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.