
சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 223 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் அங்கும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.