
டிக் டாக், வி சாட் போன்ற செயலிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும், இந்த செயலிகளல் மூலம் சேகரிக்கப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் சீனாவுக்கு வழங்கப்படலாம் எனவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் இது போன்ற குற்றச்சாற்றுகளை சீனாவும் அந்நிறுவனங்களும் திட்டவட்டமாக மறுக்கின்றன.
டிக் டாக் செயலி நிறுவனம் :
டிரம்ப் பின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் டிக் டாக் நிறுவனம் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இது வரை இல்லாத அளவுக்கு மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. இம்முடிவானது முழுக்க டிரம்ப் நிர்வாகத்தின் சந்தேகங்களை கருத்தில் கொண்டே செயல்பட்டது .அதிபர் டிரம்ப் இன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு சீனா முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளது ..
வி – சாட் நிறுவனம் :
வி – சாட் செயலியை நிர்வகிக்கும் டென்சன்ட் நிறுவனம், டிரம்ப் இன் அதிரடி நடவடிக்கையால் பெரும் இன்னல்களையும் ,துரதிஷ்டவசமான சூழ்நிலையையும் சந்திக்க நேரிட்டுள்ளது .இத்தடை குறித்து மேலும் தொடர்ந்து அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் வீ சாட் செயலியை பயனாளர்கள் 20 -09 -2020 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பயன்படுத்த இயலாது என அறிவித்துள்ளது .
ஆனால், டிக் டாக் செயலியை அடுத்த மாதம் நவம்பர் 12ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது .
அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,எந்த ஒரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்ய இயலாது என திட்ட வட்டமாக அறிவித்துள்ளது .