யுபிஎஸ்சி எதிர்ப்பு : மீண்டும் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை ஒத்திவைக்க இயலாது

குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 4 -ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்நிலையில் மீண்டும் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்க இயலாது என மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .திட்டமிட்ட படி தேர்வுகள் அக்டோபர் 4 அன்று நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று இருப்பதாக மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .

குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாசிரெட்டி கோவர்த்தன சாய் பிரகாஷ் என்பவர் உள்பட 20 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் .

குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை சுமார் 6 லட்சம் பேர் 72 நகரங்களில் அமையவுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர் .இதில் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் அவர்கள் சொந்த ஊர்களில் அல்லது நகரங்களில் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர் .இந்நிலையில் இவர்கள் இத்தேர்வை எழுத பல சிரமங்களை மேற்கொண்டுள்ளனர் .

இதில் கிராமபுரத்தை சார்ந்த மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் .இவர்கள் தேர்வை எழுதுவதற்கு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளது ,உடன் பிற மாவட்டங்களுக்கும் ,பிற மாநிலங்களுக்கும் சென்று தேர்வை எழுத வேண்டிய நிர்பந்தனை உள்ளது.தற்போதைய நிலையில்,கொரோன தொற்று மற்றும் பல இயற்கை சீற்றங்கள் (பெரு வெள்ளம் ) போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தேர்வர்கள் தேர்வை எழுத முடியாத அபாய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர் .

இந்த மனு திங்கட்கிழமை (செப்டம்பர் -28 ) விசாரணைக்கு வந்தது .காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை அன்று நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது .விசாரணையில் யுபிஎஸ்சி முன் வைத்த வாதமானது ,குடிமைப் பணி முதன்மைத் தேர்வு ஆனது மே 31 அன்று நடைபெறவிருந்த நிலையில் ,கொரோன தொற்றின் காரணமாக அக்டோபர் 4 தேதிக்கு தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் மீண்டும் தேர்வை தள்ளி வைக்க கூடாது என மத்திய தேர்வாணையம் அறிவித்தது .

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் ,தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்து அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை(29 -09 -2020) இன்று அளிக்குமாறு அறிவுறுத்தியது .மீண்டும் விசாரணை ஆனது புதன்கிழமை நடைபெறுவதாக அறிவித்தது .

Next Post

சென்னை உயர்நீதிமன்றம் : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்

Wed Sep 30 , 2020
சென்னை உயர்நீதிமன்றமானது வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை முடிக்க கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது . மாவட்டப் பதிவாளர் சேகரை தனி அதிகாரியாக நியமித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலை நிர்வகிக்கும் பொறுப்பை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .தாயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான விஷால் , இந்த நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார் .தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் இதே […]
tamil-film-producer-council
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய