
UFO PRO யூனிவெர்செல் சார்ஜிங்ஐ போர்ட்ரோனிக்ஸ் நிறுவனமானது அறிமுகப்படுத்தியது .இது மற்ற சார்ஜர்களை விட மிக வேகமாக சார்ஜிங் செய்யும் .UFO வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் ஆன சார்ஜர் ஆனது கருப்பு வண்ணத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது.இதன் விலை ரூ.1 ,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .உடன் 1 வருடம் உத்திரவாதத்துடன்(Warranty) வருகிறது .
போர்ட்ரோனிக்ஸ் UFO PRO சார்ஜர் -ன் முக்கிய அம்சங்கள் :
1 .UFO PRO சார்ஜ்ர் ஆனது ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய பயன்படுகிறது.இது பல வகையான சார்ஜர்கள் மற்றும் அடாப்டர்களுக்கான சிக்கல்களை தீர்க்கிறது.
2 .UFO PRO சார்ஜ்ர் மொத்தம் 6 சார்ஜ் போர்ட்களை(Port) கொண்டுள்ளது .
3 .இந்த சார்ஜர் ஆனது 1 டைப் சி 18 டபிள்யூ பி.டி போர்ட், 4 யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் 1 கியூசி 3.0 போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
4 .UFO PRO சார்ஜரின் மொத்த output ஆனது 12A /60W வரை வழங்குகிறது .
5 .மல்டிஃபங்க்ஸ்னல் சாதனமான UFO PRO சார்ஜர் ஆனது BIS- சான்றளிக்கப்பட்டுள்ளது மற்றும் Fire Retardant மற்றும் Surge Protection ஆகியவைகளை உள்ளடக்கியுள்ளது.
6 .இந்த மல்டிபன்க்ஷனால் சார்ஜர் ஆனது Android ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள், ஐபாட்கள், டேப்லெட்டுகள், ப்ளூடூத் ஹெட்ஃபோன்கள், பவர் பேங்குகள், எம்பி 3 பிளேயர்கள் மற்றும் 5 வி, 9 வி மற்றும் 12 வி யூ.எஸ்.பி சாதனங்களையும் இந்த யுஎஃப்ஒ ப்ரோ சார்ஜ்ர் ஆதரிக்கிறது .