தொகுப்புமுறை தீா்வு : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் : சீனா அறிவுறுத்தல் !

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பானது சர்வதேச அளவிலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது .ஐ.நா. வின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை நிரந்திர உறுப்பு நாடுகளாக இருந்து வருகிறது .இந்தியாவை ஐ.நா. வின் நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா,ரஷியா,பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்மொழிந்து வந்தாலும் ,அதற்கு இடையூறாக மற்றும் முட்டுக்கட்டை போடும் விதமாக இருந்து வருகிறது.

சர்வதேச அளவில் நடக்கும் விவகாரங்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக ஐ.நா அமைப்பு விளங்கி வருகிறது .ஐ.நா அமைப்பானது பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகும் .எனவே ஐ.நா அமைப்பில் இருந்த சீர்திருத்தங்களை விட,ஒரு சில புதிய சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை கொண்டுவர இந்தியா முனைப்போடு செயல்பட்டு வருகிறது . புதிய சீர்திருத்தங்கள், ஐ.நா. வின் அமைப்பை விரிவாக்கம் செய்ய இந்தியா அதற்கு பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வருகிறது .

இந்நிலையில் ,இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை அன்று நடைபெற்ற குரூப்-4 நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது .இந்த கூட்டத்தில் இந்தியா, ஜப்பான், ஜொ்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் ஐ.நா வின் விரிவாக்கம் குறித்து எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தது .எனவே ஐ.நா வின் விரிவாக்கம் குறித்து மிகவிரைவில் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வெங்பின் கூறியதாவது .சீனா ,ஐ.நா வில் சீர்திருத்தம் கொண்டுவருவதை வரவேற்பதாகவும் ,அத்துடன் ஐ.நா அமைப்பை விரிவாக்கம் செய்வது குறித்து பரந்த அளவிற்கு கருது ஒற்றுமை ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார் . ஐ.நா வின் அமைப்பை விரிவாக்கம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் சம்மந்தம் உடையவர்கள் அனைவரும் அழைத்து தொகுப்புமுறையில் தீர்வு காண்பதையே சீனா விரும்புவதாக குறிப்பிட்டார் .

Next Post

விற்பனைக்கு வந்தது !One Plus Nord -ஸ்மார்ட்போன்

Fri Sep 25 , 2020
ஒன்னு பிளஸ் நிறுவனத்தின் நியூ மாடலான Oneplus Nord ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது .இது அதிகாரபூர்வமான அமேசான் இந்தியா நிறுவனத்தின் இணையத்தின் மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது . ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: Brand : OnePlusModel : NordForm factor : TouchscreenDimensions (mm) : 158.30 x 73.30 x 8.20Weight (g) :184.00Battery capacity (mAh) :4115Removable battery : […]
one-plus-nord
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய