10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அலகு தேர்வு..

நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர அலகு தேர்வு தொடங்குகிறது.இத்தேர்வுகள் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளிலும் நடக்கிறது.தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இணையதளம் வழியாக அனுப்பப்படுகிறது.

ஒவ்வொரு பாடத்திலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்படுகிறது.

கொரோன பெருந்தொற்று காரணமாக கடந்த மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் மாணவர்கள் ஒரு மாதமாக சுழற்சி முறையில் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கான மாதாந்திர அலகுத் தேர்வு நாளை முதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..

Tue Oct 5 , 2021
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு அறிவிக்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதில் முதல் விருதாக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபவுசியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இயற்பியலுக்கான நோபல் […]
nobel-prize-for-physics-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய