பிளஸ் 12 மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசுத் தேர்வுகள் இயக்கம்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

  • வாட்ஸ் அப்-ல், மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு (Group) ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
  • வாட்ஸ் அப் குழுவில் மாணவர்களுக்கான வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
  • வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் மட்டுமே இடம்பெற வேண்டும் . வேறு செய்திகள், வீடியோக்களை கட்டாயம் பதிவிடக் கூடாது.
  • ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கென தனி வாட்ஸ் அப் குழுக்களை தொடங்க மற்றும் அதற்க்கான ஆலோசனைகளை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

Next Post

கொரோனா பாதிப்பினை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி : ICMR அனுமதி

Thu May 20 , 2021
கொரோனா தொற்றினை வீட்டிலிருந்தே கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற புதிய கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மைலாப் டிஸ்கவேரி சொலுஷன்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தொற்றினை வீட்டிலேயே அறிந்துகொள்ளும் ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் கருவியை உருவாகியுள்ளது. ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கருவியின் மூலம் மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் […]
Rapid-Antijan-covid-test
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய