NET தோ்வு ஒத்திவைப்பு..

NET தேர்வானது அக்டோபர் 17 முதல் நடைபெறும் என யுஜிசி அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது நெட் தகுதித் தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு 2 முறை NET தேர்வானது நடத்தப்படுகிறது.கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய நெட் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நிகழாண்டுக்கான நெட் தோ்வானது அக்டோபா் 17 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது.NET தகுதித் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கி செப்.5-ஆம் தேதி நிறைவு பெற்றது.

தற்போது நெட் தோ்வு நடத்தப்படும் நாள்களில் வேறு சில போட்டித் தோ்வுகளும் நடைபெறவுள்ளதால் ,தோ்வு தேதியை மாற்ற வேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்தனா். இதனைத் தொடர்ந்து நெட் தோ்வை தேதி குறிப்பிடாமல் என்டிஏ தற்போது ஒத்திவைத்துள்ளது.

Next Post

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு..

Mon Oct 11 , 2021
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல்பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டதோடு,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். முதல்கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரிதாவரவியல், விலங்கியல், […]
9th-to-12th-exam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய