நெட் தேர்வு :உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பு ..

யுஜிசி-நெட் தேர்வுக்கான (UGC-NET Exam 2021) அறிவிப்பு தேசிய தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

தகுதி: கலை ,அறிவியல் ,மேலாண்மை ,பொருளாதாரம் போன்ற துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் .

வயது வரம்பு : இளநிலை ஆராய்ச்சியாளர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும் . உதவி பேராசிரியருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது .

தேர்வு முறை : NET தேர்வு இரண்டு தாள்களை கொண்டு நடத்தப்படுகிறது .முதல் தாளானது 100 மதிப்பெண்களுக்கும் ,இரண்டாம் தாளானது 200 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது .தேர்வு நேரமானது முதல் தாளுக்கு 1 மணி நேரமும் ,இரண்டாம் தாளுக்கு 2 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது .தேர்வானது கணினி வழி மூலம் நடைபெறுகிறது .

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை ,கோவை,கடலூர் ,திருநெல்வேலி ,காஞ்சிபுரம் ,கன்னியாகுமரி ,மதுரை ,சேலம் ,தஞ்சாவூர் ,தூத்துக்குடி ,திருச்சி ,திருவள்ளூர் ,வேலூர் ,விருதுநகர் ..

விண்ணப்பிக்கும் முறை : தேர்வு எழுத தகுதியானவர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகவும் .

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.03.2021

Next Post

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : தலைமைத் தேர்தல் ஆணையம் ..

Fri Feb 26 , 2021
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார் .மேலும் ,தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரா குமார் மற்றும் சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் . தமிழகம் ,புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது .5 மாநிலங்களில் […]
sunil-arora-chief-election-commission-of-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய