தொலைதூரக் கல்வியில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல்..

தொலைதூரக் கல்வி முறையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 3 அரசு பல்கலைக்கழகங்களில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொலைதூரக் கல்வி முறைக்கு நாடு முழுவதும் கூடுதலாக 11 பல்கலைக்கழகங்களில் 74 படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 இளநிலை, 5 முதுநிலை என 10 படிப்புகளுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலை, 2 முதுநிலை என 3 படிப்புகளுக்கும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 8 இளநிலை, 4 முதுநிலை என12 படிப்புகளுக்கும் யுஜிசி தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்துவகையான பல்கலைக்கழகங்களும் புதிய பட்டப் படிப்புகளை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) முறையான அனுமதி பெறவேண்டியது அவசியமாகும்.இதன்படி தொலைதூர படிப்புகளை தொடங்க பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்தியாவில் கொரோனா நிலவரம் : புதிதாக 42,618 பேருக்கு கொரோனா தொற்று..

Sat Sep 4 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]
vaccination-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய