வைட்டமின்களும் அவற்றிற்கான உணவு முறைகளும் – ஓர் தொகுப்பு !

உடல் ஆரோக்கியம் என்பது நம் அனைவருக்கும் மிக முக்கியமானதாகும் .நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் ,நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்தவித நோய் தொற்றும் நம்மை நெருங்காது .ஆனால், நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும் ,மாறிவரும் தவறான உணவு பழக்கத்தினாலும் எண்ணற்ற நோய்களை சலுகைகளாக பெற்றுள்ளோம் .உடலை பேணிக்காப்பது அவரவரின் தலையாய கடமையாகும் .எனவே முறையான ,சத்தான உணவு பழக்கத்தினை எப்படி கையாள்வது மற்றும் எடுத்துக்கொள்வது பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம் .

வைட்டமின் A :

நம் உடல் ஆரோக்கியமாகவும் ,சருமம் பொலிவாகவும் இருப்பதற்கு வைட்டமின் A வகை உணவுப் பொருட்களை எடுத்து கொள்வது அவசியமாகும் .வைட்டமின் A -வில் முகப்பருக்களை சரிசெய்யும் தன்மை உள்ளது .

ஒருவருக்கு வைட்டமின் A சத்து குறைவாக இருந்தால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்,கண் சம்பந்தமான பிரச்சனைகளும் வரும் .எலும்பு மற்றும் பற்கள் பாதிப்படையும் .

வைட்டமின் A குறைபாடு உள்ளவர்கள் தினமும் கேரட் -ஐ எடுத்துக்கொள்வது நல்லது மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு ,அனைத்து வகையான கீரைகள் ,பால் ,முட்டை ,பப்பாளி ஆகிய அனைத்தும் வைட்டமின் A சத்து நிறைந்துள்ள உணவுகளாகும் .

வைட்டமின் B1 (தயாமின் குறைபாடு ) :

வைட்டமின் B1 குறைபாட்டால் நரம்பு(நரம்பு தளர்ச்சி) சம்பந்தமதமான பிரச்சனைகளும் ,இதய கோளாறுகளும் ஏற்படுகிறது .வைட்டமின் B1 ஆனது உலர்ந்த ஈஸ்ட்டில் அதிகமாக உள்ளது . 100கி ஈஸ்ட்டில் 11 மில்லி கிராம் அளவு தியாமின் சத்து உள்ளது .சோயா பீன்ஸ் மற்றும் பைன் கொட்டைகளில் வைட்டமின் B1 சத்து நிறைந்துள்ளது ,அவை இதயத்தை பலப்படுத்தி ,ரத்த ஓட்டத்தை சீராக்கும்.நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுப்பதோடு ,ரத்த குழாய்களிலுள்ள அடைப்புகளை நீக்குகிறது .இது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது .

வைட்டமின் B2 (ரிபோபிளேவின் ) :

வைட்டமின் B2 உடலின் ஆற்றல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது .வைட்டமின் B2 மஞ்சள் நிறத்தை குறிப்பதாகும் ,எனவே மஞ்சள் நிறம் கொண்ட காய்கறிகள் ,பழங்கள் இதற்கு உகந்ததாகும் .வைட்டமின் B2 நிறைந்த உணவுகளை உடல் ஆனது உடனே ஏற்றுக்கொள்ளும்,பின்னர் விரைவில் செரிமானமாகும் உணவாகும் .

முட்டை, கொட்டைகள், பால் பொருட்கள், இறைச்சிகள், ப்ரோக்கோலி, ப்ரூவர்ஸ் ஈஸ்ட், பிரஸ்ஸல் முளைகள், கோதுமை உணவுகள், காட்டு அரிசி, காளான்கள், சோயாபீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றில் வைட்டமின் B2 அதிகம் நிறைந்துள்ளது .

வைட்டமின் B2 கண்ணில் முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாக இருக்கும் குளுதாதயோனைப் பாதுகாக்க பயன்படுகிறது .ரிபோஃப்ளேவின் நிறைந்த உணவை உட்கொள்வதால் கண்புரை உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்.இரத்த அணுக்கள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளின் புறணி ஆகியவற்றிற்கும் வைட்டமின் B2 பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் B3 (நியாசின் ) :

வைட்டமின் B3 ஆனது வைட்டமின் B தொகுதிகளில் ஒன்றாகும் .இந்த வைட்டமின் B3 ஆனது தண்ணீரில் கரையக்கூடிய ஒன்றாகும் ,இதனை உடலால் சேமித்து வைக்க இயலாது .வைட்டமின் B3 அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும் .

வைட்டமின் B3 இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது .ஆர்தரைடிஸ் எனப்படும் மூட்டு பகுதிகளான முழங்கால் ,முழங்கை மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது .நீரிழிவு நோய் கட்டுப்பட மற்றும் மூளை திறன் அதிகரிக்கவும் பயன்படுகிறது .பெல்லகரா போன்ற நோயானது வைட்டமின் B3 குறைபாட்டால் ஏற்படுவதாகும் ,எனவே வைட்டமின் B3 நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் இந்நோயிலிருந்தும் விடுபடலாம் .

உலர்ந்த ஈஸ்ட் ,பச்சை வேர்க்கடலை,மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியில் நியாசின் அதிக அளவு நிறைந்துள்ளதால் இது உடலுக்கு வலுவை தருகிறது .

வைட்டமின் B6:

வைட்டமின் B6 ஆனது வைட்டமின் B தொகுதிகளில் சான்றாகும் .வைட்டமின் B6 குறைபாட்டால் ரத்தச் சோகை ,நரம்பு தொந்தரவுகள் மற்றும் ஹோமோசிஸ்டினியூரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும்

வைட்டமின் B6 ஆனது மீன் ,மாட்டிறைச்சி கல்லீரல்,கோழி போன்ற உணவுகளில் வைட்டமின் B6 அதிகம் உள்ளது .மேற்கண்ட உணவை காட்டிலும் கொண்டைக்கடலையில் 50% வைட்டமின் B6 நிறைந்துள்ளது .வைட்டமின் B6 நிறைந்த உணவுகளை முழுமையா எடுத்துக்கொண்டால் மேற்கண்ட குறைபாடுகளை சரிசெய்யலாம் .

வைட்டமின் B12:

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு வைட்டமின் B12 பயன்படுகிறது .சிவப்பு ரத்த செல்களை உருவாக்குதல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாத்தல், டிஎன்ஏ உருவாக்கம், உடலுக்கு ஆற்றல் அளித்தல் போன்ற செயல்பாடுகளும் இதில் அடங்கும் .

வைட்டமின் B12 குறைபாட்டால் ரத்தச் சோகை மற்றும் கடுமையான சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும் .வைட்டமின் B12 போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் மேற்கண்ட பாதிப்பிலிருந்து விடுபடலாம் .பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள் ,செறிவூட்டப்பட்ட உணவுகள் ,மீன்,நண்டு போன்ற உணவுகளில் வைட்டமின் பி௧௨ அதிகம் உள்ளது .

வைட்டமின் C:

வைட்டமின் சி ஆனது தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும் .இது எளிதில் இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும் .ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைபழத்திலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது .வைட்டமின் C உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது ,இதில் முக்கியமாக இயற்கையாகவே கொலாஜன் உருவாக்க உதவுகிறது .

இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படுகிறது .

கொய்யா ,மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் ,கிவி ,ப்ரகோலி,ஆரஞ்சு,அன்னாசிப்பழம் ,பப்பாளி ,காலிபிளார்,நெல்லிக்காய் ,மாம்பழம் போன்றவை வைட்டமின் சி நிறைந்த உணவுகளாகும் .

வைட்டமின் D:

உடல் வளர்ச்சியில் வைட்டமின் D முக்கிய பங்கு வகிக்கிறது .உடலானது சூரிய ஒளியில் படும்போது வைட்டமின் D ஆனது சத்தை உற்பத்தி செய்துகொள்கிறது.உலகி வாழும் மக்களில் 50% மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் .வெளியில் செல்பவர்கள் சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷ ன்களை பயன்படுத்திவருகிறார்கள்.இது வைட்டமின் D குறைபாடு ஏற்பட முக்கிய வழியாக இருக்கிறது .

முதுகுவலி, தசைவலி, உடல் வலி, காரணமே இல்லாமல் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படுகிறது .மேலும் எலும்பு அழற்சி, எலும்பு புரை போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .

பால் ,மஷ்ரூம் ,சால்மன் மீன் ,ஆரஞ்சு சாறு,முட்டை ,ஓட்ஸ்,சூரிய ஒளி போன்றவைகளில் வைட்டமின் D அதிக அளவு நிறைந்திருக்கிறது .

வைட்டமின் E :

உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கு பல்வேறு வைட்டமின்களான A,B,B12,C,D போன்ற விட்டமின்கள் இருக்கும் நிலையில் வைட்டமின் E முக்கிய பங்கு வகிக்கிறது .வைட்டமின் E சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், உடலில் நோய் தங்காமல் இருக்கும்.

இரத்தம் உறைதல், நுரையீரல்,புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் போன்றவை வைட்டமின் E குறைபாட்டால் ஏற்படுகிறது .

பசலை கீரை,ஆலிவ் ஊறுகாய் ,உளர் மூலிகைகள் ,வேர்க்கடலை ,பாதம் ,கடுகுக்கீரை ,ப்ராக்கோலி ,பிஸ்தா போன்ற உணவுகள் வைட்டமின் E நிறைந்த உணவுகளாகும் .

வைட்டமின் k:

வைட்டமின் k ஆனது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும் .வைட்டமின் k இரண்டு வகைகளில் உள்ளது .தாவரங்களின் மூலமாக கிடைக்கும் வைட்டமின் k 1 ,மற்றும் குடலிலில் இருந்து இயற்கையாகவே கிடைக்கும் வைட்டமின் k 2 ஆகும் .

வைட்டமின் k குறைபாட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ,கல்லீரல் நோய் ,விரைவான இதயத்துடிப்பு ,தடிப்புகள் ஆகிய குறைபாடுகள் ஏற்படுகிறது .வைட்டமின் K, குறைபாட்டால், சிறு காயம் ஏற்பட்டாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

முட்டைகோஸ், காலிஃப்ளவர், கீரை வகைகள், கடற்பாசி, பச்சைநிறக் காய்கறிகள் போன்ற உணவுகளில் வைட்டமின் k அதிகம் நிறைந்துள்ளது .

Next Post

one plus 9 ஸ்மார்ட்போன் பற்றிய சில அறிய தகவல்கள் !

Thu Oct 22 , 2020
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான one plus 9 ஸ்மார்ட்போனை அடுத்த வருடம் வெளியிடுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது .இந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. பொதுவாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போன்களை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது .ஆனால் இந்தமுறை சற்று முன்கூட்டியே ,அதாவது மார்ச் 2021 அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . ஒன்பிளஸ் நிறுவனமானது […]
one-plus-9-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய