
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ” ஊரகத் திறனாய்வு தேர்வு ” ஆண்டு தோறும் அரசுத் தேர்வுத் துறையால் நடைபெற்று வருகிறது.
தகுதியான தேர்வர்கள் இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் 9 – ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள்.
நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000 / – க்கு ( ரூபாய் ஒரு இலட்சத்திற்கு ) மிகாமல் இருத்தல் வேண்டும்.
30.01.2022 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை 06.12.2021 முதல் 14.12.2021 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 14.12.2021 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.