பிளாக் ஃபங்கஸ் பூஞ்சை தொற்றிற்க்கான சிகிச்சை முறை மற்றும் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன ?

பிளாக் ஃபங்கஸ் பூஞ்சை எனப்படும் மைகோர்மைகோசிஸ் கொரோனாவிற்கு அடுத்தபடியாக பெரும் அச்சுறுத்தலை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.கொரோனா நோயாளிகள் ஸ்டீராய்டு மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்
பிளாக் ஃபங்கஸ் பூஞ்சை எனப்படும் மைகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 52 பேர் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில் ,இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 1500 பேர் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை முறை :

பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சை முறையே மைகோர்மைகோசிஸ் தொற்றுக்கு பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மைகோர்மைகோசிஸ் தொற்றுக்கு மாத்திரை மருந்துகள் தொடர்ந்து 4 முதல் 6 வாரம் வரை உட்கொள்ள வேண்டியிருக்கும்.

மைகோர்மைகோசிஸ் பூஞ்சை தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.மேலும் ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ளுதல் ஸ்டீராய்டு மருந்து பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல் மூலம் மைகோர்மைகோசிஸ் பூஞ்சை தொற்றிலிருந்து விடுபடலாம்.

தற்காத்துக்கொள்வது எப்படி ?

*மைகோர்மைகோசிஸ் பூஞ்சை தொற்றிலிருந்து விடுபட சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக அவசியம்.

*கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள் தங்களின் சர்க்கரை அளவை முறையாக கண்காணிக்க வேண்டும்.

*ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளுதல் கூடாது. ஆக்சிஜன் தெரபியின் போது நோயாளிகளுக்கு சுத்தமான நீரைக் கொண்டு ஈரப்பதமூட்டிகளை தயார் செய்ய வேண்டும். ஆண்டிபயாடிக், ஆண்டி ஃபங்கல் மருந்துகளையும் அவசியமின்றி எடுத்துக்கொள்ள கூடாது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : இன்று புதிதாக 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று

Fri May 14 , 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ,மாநில அரசுகள் இணைந்து கடுமையாக போராடி வருகின்றன.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]
covid-cases-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய