
தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு மையங்கள் அருகிலேயே அமைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்வர்கள் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும்,129 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.